கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2019 )

வணக்கம் நண்பர்களே!, நமது கவிதை தளத்தில் மாதம், மாதம் கவிதை  போட்டி துவங்கப்பட்டுருக்கு , விருப்பம்  உள்ள நண்பர்கள் உங்களது கவிதையை இந்த (ஈமெயில்) ( apdineshk@gmail.com ) அனுப்புங்கள். முடிந்தால் கவிதையை  நல்ல புகைப்படங்களில் கவிதையை வரைந்து அனுப்புங்கள். {March} 2018 மாதம் முடிவில் வெற்றி பெற்றவர்களின் விவரம் நமது கவிதை தளத்தில் அறிவிக்கப்படும். வெற்றி பெற வாழ்த்துக்கள்!

Latest Tamil Kavithai Competition

பரிசு:


1.) முதல் பரிசு Rs: 500 மதிப்புள்ள (Amazon gift voucher)

2.) இரண்டாம் பரிசு Rs: 200 Paytm Recharge

3.) முன்றாம் பரிசு Rs: 50 Paytm Recharge மூன்று நபர்களுக்கு.

கவிதை போட்டிக்கான விதிமுறைகள்:


1.) கவிதை நீங்கள் எழுதிய கவிதையாக இருக்க வேண்டும்.
(புதுக் கவிதை, ஹைக்கூ கவிதை, மரபுக் கவிதை)

2.) தமிழ் கவிதைகள் - காதல், நட்பு, தாய்மை, இயற்கை, குடும்பம், வாழ்கை, அரசியல் போன்றவற்றை சார்ந்ததாக இருந்தல் நன்று.

3.) உங்களது கவிதை {March} 2019 மாதம் முடிவில் வெளிடப்படும்.

4.) வெற்றியாளர்கள் - அந்த கவிதைக்கு கிடைக்கும் பாராட்டு மற்றும் விமர்சனங்கள் வைத்தும் பரிசு அளிக்கப்படும்.

5.) உங்களது கவிதை வெளியிட்டதும் மறக்காமல் உங்களது நண்பர்களுக்கு ஷேர் (Share) செய்யுங்கள். EX: Facebook, Google+,Twitter...

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!


தமிழ் கவிதை போட்டி - Tamil kavithai competition 2019, Tamil kavithai potti, Latest Tamil Kavithai Competition,Tamil poem writing competition, Poem writing competition online, Poem writing competition in india

6 புடிச்ச வாழ்த்துங்க இல்லன என்ன திட்டுடாவாது போங்க!:

Guwahati Venkat said...

நன்றி, வரவேற்க்கப்படவேண்டிய அறிவிப்பு.

Rathinamoorthy Malaiyappan said...

'ஜாதி' தமிழே இல்லாத ஒரு வார்த்தை 'தீ ' 💥எரிய தலைமுறை தலைமுறையாய் காய்ந்த இலைகளா 🍂தமிழனின் தலைகள்! சந்ததியற்ற 'சொல்' சந்திரனாய் மிளிற🌞 சவரன் விலையாய் உயரும் சாவுகள்! வள்ளுவரின் குறளில்லை இக் 'கூவம்'! 😳 நாழடியாரில்லை இந் 'நாற்றம்'! 🙄 தேவையா நமக்கு இதன்மேல் இவ்வளவு நாட்டம்! 🤔 பிரித்து பார்ப்பர்கள் பிரிந்து போகட்டும்! 🏃🏼 பிரியாமலிருப்போம் பிரியமானவர்களே!👏

Unknown said...

அப்பா
""""""""""
தாயின் கருவறை விட்டு வெளிவந்த
அடுத்த கணம்
தகப்பன் பிரசவித்தான்
என்னையும் என் அன்னையையும்
இன்றளவும் சுமக்கிறான்
சுமை என்று எண்ணாமல் ...

அவனோ ..

பெறு முள்ளாய் என்னை
ஒரு படி முன்னேற்ற
நொடி முள்ளாய் என் பின்னே
60படி ஓடுகிறான் ஓய்வின்றி...

அந்நியனாய் கோபிக்கிறான்
அடுத்தவனிடம்
அம்பியாய் அணைக்கிறான் என்னை கண்ட
அடுத்த கணம் ...

என் பிரிய உணவோ அவனுக்கு
பிடிக்காமல் போகிறது
அவன் பங்கும் எனதாகும்
என்பதாலே ...

இன்றளவும் எனக்கு
வலி காட்டாமல்
வழி காட்டுகிறான்
அவனை
இன்னார் அன்று
இன்னார் தகப்பன் என்ற
சொல்லால் நிறைப்பேன் ...
-Bharath

lakshmi k. said...

உனக்காய் சிரித்தேன் உனக்காகவே வாழ்ந்தேன் உன்னையே இதயத்தில் சுமந்தேன் உனக்காக மட்டுமே துடிக்கிறது என்னிதயம் உன் இதயம் ஏனடி என்னை ஏற்க மறுக்கிறது உதிர்ந்தால் சருகாகும் வாழ்க்கை உன்னோடு வாழத் துடிக்குது வேட்கை என்னை கொள்ளை கொண்ட அன்பு ராட்சசியே என்னோடு இணைந்திட வா இமைகளில் தேங்குது கண்ணீர் இளமையின் நினைவலைகள்... நேரங்கெட்ட வேளையில் கதவை மூடிகிட்டு என்ன வேலை அங்கே திவ்யா டான்ஸ் கிளாஸ் போக ரெடியாயிருக்கா.. அவசமாய் மூடுகையில் சிரித்தாள் என் திவ்யா மனதில்...

TamilRasigan said...

சாதத்தை மிச்சம் வைக்காதே என்று சொல்லுவதும் தாய் தான்
மிச்சம் வைத்த சாதத்தை உண்ணுவதும் தாய் தான்

சிந்தாமல் உண்ணு என்று சொல்லுவது தாய் தான்
சிந்திய உணவை பொறுக்குவதும் தாய் தான்

வேகமாக சாப்பிடு என்று சொல்லுவது தாய் தான்
போரக்கை யேறினால் தண்ணீர் தருவது தாய் தான்

இப்படிக்கு,
தமிழ் ரசிகன்...

YASHWANTH M said...

"விட்டு செல்லாதே"உன்னை தேடி வருவேன் நானு

உனக்காக வாழ்கிற நானும்

விட்டு விட்டு செல்லாதடி

பேர் அழகே,

விலகி விலகி தோலைவில் சென்றால்

தாங்கும்மாடி எந்தன் மனமும்

அணைப்பு கொள்ள அருகில் வாடி என் உயிரே...கண்ணின் பனி துளி கண்ணிர் நீ

விழாமல் பார்த்து கொள்ளும்

இமைகள் நான்,

சுமையில்லா சுவாசிக்கும் மூச்சும் நீ

உன்னை சுமந்து கொள்ளும்

நாசி நான்,

உன்னை நானும் நினைக்கும் போது

முல்லும் மலர்கிறதே,

என்னை நீயும் நினைக்கா விடின்

சுவாசம் நின்று கொள்கிறதே...நடப்பதும் அனைத்தும்

நிஜம் என்றால்

உன்னுடன் வாழ்ந்த

கனவு போதும்,

கனவில் மட்டும்

வாழ்ந்தேன் என்றால்,

நரகம் என்றாலும்

அதுவே போதும்,

விட்டு செல்லாதடி என் உயிரே...- யஷ்வந்த் ம