நலம் அறிய ஆவல்!

உன்னை நேசித்துவிட்டு...
விலகி போனவர்கள்!..
யாராக இருந்தாலும்!!!
நீண்ட நாள் கழித்து பார்த்த போது...
நாம் கேட்டுக்கும் முதல் கேள்வி
நீ எப்படி இருக்க?

- தினேஷ் குமார் எ பி

பூவின் இதழ் சிவப்பு!

பூவின் இதழ் சிவப்பு!

காலையில் ஆயிரம்!!!
மலர்கள் மலர்ந்தாலும்...
உன் இதழ் புன்னகையே!!!
என் நினைவில் மலர்கின்றன!..
தினம் தினம்!!!..

- கவிஞர். தினேஷ் குமார் ஆ. பா

வாழ்க்கை!

life tamil kavithai tamil
ஒரு நாள் வாழப்போகிறோம் என்று
தெரிந்த பின்பும்,
அழகாய் சிரித்து மடிகிறது
இந்த பூக்கள் !
நுறு வருடம் வாழும்
நாம் ஏன் சந்தோஷத்தை
தேடும் பிச்சைக்காரர்களாக!
ஆகிறோம் எப்போதும்?

- கவிஞர். தினேஷ் குமார் ஆ. பா

நிலவு பெண்ணானது!

vennila kavithaigal in tamil

யாரிடமும் சொல்லாமல்,
பூமியில் பெண்ணானது - நிலவு!

அவள் கண்விழித்து பார்த்தால்
பௌர்ணமி !

கண்களை சிமிட்டி பார்த்தால் !
வளர்பிறை !

நான் இப்பொழுது ஆகிறேன் !
உன்னால் தேய்பிறை !

நீ போதும் என்று சொல்லு !
ஒரு முறை !

- கவிஞர். தினேஷ் குமார் ஆ. பா


கரையும் பனி!

beautiful tamil kadhal kavithaigal
உன்னை பார்த்தபின்பு
ஓவ்வொரு பூக்களின் கர்வமும்,
காணாமல் போகின்றன…
கீழே விழும் - பனித்துளியில் !

- கவிஞர். தினேஷ் குமார் ஆ. பா

பகலில் தோன்றாத நிலவு!

nilavu kavithai tamil
நீ இரவில் மட்டுமே
உன் முகம் காட்டுகிறாய்!
இப்பொழுது புரிந்தது
ஏன் இரவில் மட்டும்
நிலவு வருவதென்று !

- கவிஞர். தினேஷ் குமார் ஆ. பா

ஒற்றை கால் நடனம்!

roja tamil kavithai

ரோஜாக்களே அசைந்து - அசைந்து
ஒற்றை காலுடன்
நடனம் எதற்கு?
அது சொன்னது !
உன் அன்னத்தின்
தலையில் சூடிக்கொள்ள என்று !!!

- கவிஞர். தினேஷ் குமார் ஆ. பா

மேக முத்தங்கள்!

உன் உதட்டின் மேலே
மூச்சுக்காற்று பட்டதும்...
தூவுமோ...என்
இதழினிலே
சில முத்தங்கள் !!

- கவிஞர். தினேஷ் குமார் ஆ. பா

தாமரை முகம்!

Thamarai kadhal kavithai
சிவப்பு
கம்பளத்தில்
தாமரை முகம் !
என்னவள் !

- கவிஞர். தினேஷ் குமார் ஆ. பா

ஓவியம்!

இந்த ஓவியத்திற்கு எப்படி
என்னை பிடித்துப்போனதென்று
தெரியவில்லை ?
துரிகையாக நான்
உன்னுள் கலந்திட காத்திருக்கிறேன் !!
 
     - கவிஞர். தினேஷ் குமார் ஆ. பா

கண்னே கண்ணுறங்கு!

amma kavithai in tamil

பாடல் முடிந்த பிறகும்

திரும்ப திரும்ப கேட்கத்தோன்றும் !

வரிகள் தான் நம் அன்னை சொல்லும்

அரிராராரோ !!!

- கவிஞர். தினேஷ் குமார் ஆ. பா

அன்னையும், தங்கையும்!

mother sister tamil kavithaigal

எனக்கு பெண்கள்
மீது மதிப்பு
ஏற்படுவதற்கு காரணம்
என் அன்னையும்,
தங்கையும் தான்!!

- கவிஞர். தினேஷ் குமார் ஆ. பா

தங்கை தாய் போன்றவள்!

sister kavithaigal

என்னை
கவனித்துக்கொள்ள
கடவுள் அனுப்பிய
இரு தாய் தான்
என் தங்கைகள் !!

- கவிஞர். தினேஷ் குமார் ஆ. பா

காதல் துளி!

mazhai kavithai

இறந்தாலும் பிறக்கும் மழையாக வேண்டும்.
பிறக்கும் போது உன் இதயத்தில் விழ வேண்டும்.
விழுந்த பின்பு உன் தாகத்தையாவது தணிக்க வேண்டும்.

- தினேஷ் குமார் எ பி

காதல் மறதி!

tamil kavithai pirivu

நமக்குள் ஒரு போட்டி

நம்மில் யார் முதலில்

நம் காதலை மறப்பது - என்று

அப்போதும் நீ தான்

வெற்றிபெறுகிறாய்!

- தினேஷ் குமார் எ பி

கல்லடிப்பட்டாலும் உடையாத கண்ணாடி காதல்

கண்ணாடி காதல்

எனது காதல் கண்ணாடி போன்றது

அதனால் தான் என்னவோ

நீ கல்லெறிந்த பிறகும்

உன்முகம் காட்டுகிறது!

அழகிய பிம்பமாக

எனது காதல்.

- தினேஷ் குமார் எ பி

இமைகள் உதடுகள்!

Tamil Kavidhai Mutham

நீ தோளில் சாய்ந்த போது - உனது
இமைகள் உதடுகளாக மாறினால்
முத்தம் வேண்டும் - கன்னத்தில்
அல்ல எனது இதழில் அன்பே!

- தினேஷ் குமார் எ பி


எனக்கே உரிய சந்தோஷம்:

உனக்காக இதை செய்தேன் - என்பதை

உன்னிடம் சொல்வதை விட

உனக்கு பிடித்தது அனைத்தும் - செய்தேன்

என்பது எனக்கு அது சந்தோஷம்!

- தினேஷ் குமார் எ பி

 


நமது காதல்

sad love kavithai
எனக்கு இது போதும்
என்று நினைத்தது
உன்னை மட்டும் தான்
அதனால் தான் நீ கேட்டும்
என்னால் விட்டு கொடுக்க
முடியவில்லை உன்னை.

- தினேஷ் குமார் எ பி

எதிர்கால கவிதை!


எதிர்கால கவிதை!

இதுவரை உன்னை  பார்க்கமால்

போனது எனது இறந்தகாலம்!..

உன்னை மட்டுமே நினைத்து கொண்டுருக்கிறேன்

இது எனக்கு நிகழ்காலம்!..

நீ மட்டுமே வாழ்க்கை என்றால்

அதுதான் எனக்கு எதிர்காலம்!...

- தினேஷ் குமார் எ பி