கல்லூரிகாலம்

Tamil kavithai about college life

கல்லூரிகாலம்
அது ஒரு காலம்
மனதில் மழை பெய்த காலம்...

வாழ்க்கையில் பூ தூவப்பட்டதும்
இளமைக்கு சிறகு முளைத்ததும்
மகிழ்ச்சிக்கு அர்த்தம் பிறந்ததும் இக்காலமே..

‘’சொல்வதற்கு வார்த்தை இல்லை’’
என்ற வர்ணனைக்கு உட்பட்ட காலம்...

நினைக்க..நினைக்க..
கூடி மகிழ்ந்த நினைவுகளை சேகரித்துக் கொள்ள
இன்னொரு இதயம் உருவாக்கு என்று
என் புலன்களுக்கு புத்திமதிசொல்லும் காலம்..

வட்டதட்டைசுற்றி
வட்டமாய் அமர்ந்து
கழுவாதகைகளால் சோறூட்டி
வேற்றுமையை கழுவிக்கொண்ட காலம்…

மே மாத கத்திரியில்
மொத்த ஊரும் வெயிலை ஒதுங்கியிருக்க,
ஊர்சுற்ற உறவு படைத்த
ஓர் உதவியாளன் இந்த கல்லூரி...

இதோ,
நினைத்தால் வந்து சேர்கிறது..,
நடந்து சென்றபாதையெல்லாம்
கால்களுக்கான கூட்டணி...
கூடியிருந்த வேளையெல்லாம்
இவ்வுலகம் மறந்து சொர்க்கம்...

உதவுகின்ற தருணங்களில்
மாற்று உருவமாதாபிதா...
பிரிந்து நிற்கும் பொழுதெல்லாம்
தயக்கம் தங்காததாபத்தோடும்
மறுமுறை பார்க்க எண்ணும் ஏக்கத்தோடும்...


என் விதிரத்தின் தோல்களில்
சுருக்கம் முளைத்துவிட்டது..,
இன்னமுமே,
தோள்கொடுக்கும் பிரிவினர் தொட்ட என் கைகளில்
தொட்டுக்கொண்டேயிருக்கும் ரேகைபதிவுகளுக்கு சுருக்கமில்லை.

திருமணவழியே துணையை எண்ணுகையில்
ஒரு விரல்போதும்...
பிள்ளையை சார்ந்து துணையை எண்ணுகையில்
அதிகப்பட்சவிரல் ஆறோ ஏழோ தலைதூக்கும்...
கல்லூரி அளித்ததுணையை எண்ணிப்பார்க்கையில்
மனசாட்சிப்படியே,
பத்து விரல்பத்தவில்லை.

எப்பொழுதெல்லாம்
வேதனை சுமந்துகண்ணீர்சுரக்கின்றேனோ
அப்பொழுதெல்லாம்
கண்ணீர்துடைத்து
வேதனைக்கு கொள்ளிவைக்கும் கைகளெல்லாம்
கல்லூரி அறிமுகப்படுத்தியகைகளே!

அங்கே,
கொடுத்த பொருளை திருப்பிக்கொள்ள
அதிகாரம் காட்டினால்
அடி கொடுக்கும் கூட்டம்...
கடனாய் ஒன்று வாங்கையிலே
அனுமதி கேட்டால்
அழுகை இடும் ஜாதி...

வாழ்க்கை விடுதியில் விழுந்தவுடன்
வீட்டு உறவுமனம் கிள்ளும்...
மறுத்ததில்லை ...ஏற்றுக்கொள்கிறேன்.
நித்தியமாய்,
விடுதி மூடி வீடு திறந்தவுடன்
விடுதியில் இணைந்தகைகள்உயிரை அள்ளுகிறது.

கடந்த கால கல்லூரிவாசிகளே!
உன் மனதில்,
கல்லூரி காலம் ஒரு திரைப்படம் என்றால்,
வாழ்நாள் வரை ஓடுகின்ற திரைப்படம் அதுவே!

உள்ளத்துபடியே பார்த்தால்
அது காலம் அல்ல...
ஒற்றுமையின்காவியம்
ஒன்றிணைந்த ஜீவியம்
கோடிவிரல் சேர்ந்தெழுந்த நட்போவியம்..
                           
- ஹரிதாஸ் (வைர ஹரன்)


2 புடிச்ச வாழ்த்துங்க இல்லன என்ன திட்டுடாவாது போங்க!:

Anonymous said...

I have read so many articles on the topic of the blogger
lovers however this piece of writing is actually a pleasant piece of writing, keep it
up.

Feel free to surf to my blog post; gold watches,
,

Anonymous said...
This comment has been removed by a blog administrator.