அன்பால் என்னவள்!

anbu kavithai in tamil language
என்னவளுக்கு இதில் எது பிடிக்கும் என
எனக்கு மட்டும் தான் தெரியும்... 
அவள் கூட தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை...
ஏன் என்றால் எனக்கு பிடித்தால் மட்டுமே போதும்...
உடனே அது அவளுக்கும் பிடிக்கும் என்பால்!

இதயத்தின் ஏக்கம்!

heart kavithai tamil

நீ இமை மூடி பார்த்து செல்லும்பொழுது...
உதிர்ந்த சருகின் ஓசை எனது இதயத்தில்...
பொறுமையாகவே நடத்து செல்...
ஏன் இதயம் தாங்க...
- Dinesh Kumar AP

நீ என் இமை போன்றவள் !

sweet love poems

எனது கண்களில் கண்ணீர் கசிந்தால் 

கண் இமை முடி 

வரும் கண்ணீருக்கு  

தடை போடுகிறாய் 

அதனால் தான் என்னவோ

 நீ என் கண் இமையகிறாய்...

- தினேஷ் குமார் எ பி

 

உன் நினைவுகள் !

kadhal kavithaigal in tamil

தவறான எண்ணங்கள் கூட
என்னிடமிருந்து நீங்கி விடுகின்றன..
என் எண்ணத்தில் உன் எண்ணங்கள்
வைக்கும் போது அன்பே!
                                                                             - AP Dinesh Kumar

நண்பர்கள் அதிகம்

friendship kavithai in tamil

எனக்கு அதிகமான
நண்பர்கள் இருக்கிறார்கள்
என்பதில் எனக்கு
முகநுாலில் {Facebook} அல்ல
முகம் அறிந்து!
                                                              - AP Dinesh Kumar

என் கவிதைகள்!

tamil love sad kavithai photos

நான்
சந்தோஷமாக இருக்கும் போது
கவிதை படிக்கதோனும்.
சோகமாக இருக்கும் போது
எழுததோனும் - நான் படித்ததை விட
எழுதுனதே அதிகம்

சுதந்திர தினம் பள்ளியில்!

Indian independence day kavithai in tamil

அதிகாலை எழுந்து! பள்ளி சீருடை அணிந்து!
ஜாதி ,மதம் பார்க்காமல் கொடியை தாங்கும் குண்டூசி!
மேகங்கள் களைந்து! வருசையில் நின்ற நட்சத்திரம்!
கொடி வான்மேல் உயர்ந்து!
தலைமை ஆசிரியரின் கொடி ஏற்றம்!
சுதந்திர போராட்டத்தில் உயிர் தியாகம்!
செய்தவர்களுக்கு வீர வணக்கம்!
சிறுவர்களின் கலையாட்டம்!
விளையாட்டு போட்டியில் வென்றவர்களுக்கு விருது!
ஆட்டம் பாட்டம் முடிந்தவுடன் கைகள் நிறைய இனிப்பு!
ஒவ்வொரு குழந்தை முகத்திலும் சிரிப்பு!

                                                                                - Dinesh kumar AP

மழையில் உருகும் காதல்!

Mazhai kadhal kavithai

இருவரும் தொலைவில் இருந்தாலும்...

 உன்னையும் என்னையும் உறைய வைக்கும்

 ஒருத்தியவள் மழை!

கல்லூரிகாலம்

Tamil kavithai about college life

கல்லூரிகாலம்
அது ஒரு காலம்
மனதில் மழை பெய்த காலம்...

வாழ்க்கையில் பூ தூவப்பட்டதும்
இளமைக்கு சிறகு முளைத்ததும்
மகிழ்ச்சிக்கு அர்த்தம் பிறந்ததும் இக்காலமே..

‘’சொல்வதற்கு வார்த்தை இல்லை’’
என்ற வர்ணனைக்கு உட்பட்ட காலம்...

நினைக்க..நினைக்க..
கூடி மகிழ்ந்த நினைவுகளை சேகரித்துக் கொள்ள
இன்னொரு இதயம் உருவாக்கு என்று
என் புலன்களுக்கு புத்திமதிசொல்லும் காலம்..

வட்டதட்டைசுற்றி
வட்டமாய் அமர்ந்து
கழுவாதகைகளால் சோறூட்டி
வேற்றுமையை கழுவிக்கொண்ட காலம்…

மே மாத கத்திரியில்
மொத்த ஊரும் வெயிலை ஒதுங்கியிருக்க,
ஊர்சுற்ற உறவு படைத்த
ஓர் உதவியாளன் இந்த கல்லூரி...

இதோ,
நினைத்தால் வந்து சேர்கிறது..,
நடந்து சென்றபாதையெல்லாம்
கால்களுக்கான கூட்டணி...
கூடியிருந்த வேளையெல்லாம்
இவ்வுலகம் மறந்து சொர்க்கம்...

உதவுகின்ற தருணங்களில்
மாற்று உருவமாதாபிதா...
பிரிந்து நிற்கும் பொழுதெல்லாம்
தயக்கம் தங்காததாபத்தோடும்
மறுமுறை பார்க்க எண்ணும் ஏக்கத்தோடும்...


என் விதிரத்தின் தோல்களில்
சுருக்கம் முளைத்துவிட்டது..,
இன்னமுமே,
தோள்கொடுக்கும் பிரிவினர் தொட்ட என் கைகளில்
தொட்டுக்கொண்டேயிருக்கும் ரேகைபதிவுகளுக்கு சுருக்கமில்லை.

திருமணவழியே துணையை எண்ணுகையில்
ஒரு விரல்போதும்...
பிள்ளையை சார்ந்து துணையை எண்ணுகையில்
அதிகப்பட்சவிரல் ஆறோ ஏழோ தலைதூக்கும்...
கல்லூரி அளித்ததுணையை எண்ணிப்பார்க்கையில்
மனசாட்சிப்படியே,
பத்து விரல்பத்தவில்லை.

எப்பொழுதெல்லாம்
வேதனை சுமந்துகண்ணீர்சுரக்கின்றேனோ
அப்பொழுதெல்லாம்
கண்ணீர்துடைத்து
வேதனைக்கு கொள்ளிவைக்கும் கைகளெல்லாம்
கல்லூரி அறிமுகப்படுத்தியகைகளே!

அங்கே,
கொடுத்த பொருளை திருப்பிக்கொள்ள
அதிகாரம் காட்டினால்
அடி கொடுக்கும் கூட்டம்...
கடனாய் ஒன்று வாங்கையிலே
அனுமதி கேட்டால்
அழுகை இடும் ஜாதி...

வாழ்க்கை விடுதியில் விழுந்தவுடன்
வீட்டு உறவுமனம் கிள்ளும்...
மறுத்ததில்லை ...ஏற்றுக்கொள்கிறேன்.
நித்தியமாய்,
விடுதி மூடி வீடு திறந்தவுடன்
விடுதியில் இணைந்தகைகள்உயிரை அள்ளுகிறது.

கடந்த கால கல்லூரிவாசிகளே!
உன் மனதில்,
கல்லூரி காலம் ஒரு திரைப்படம் என்றால்,
வாழ்நாள் வரை ஓடுகின்ற திரைப்படம் அதுவே!

உள்ளத்துபடியே பார்த்தால்
அது காலம் அல்ல...
ஒற்றுமையின்காவியம்
ஒன்றிணைந்த ஜீவியம்
கோடிவிரல் சேர்ந்தெழுந்த நட்போவியம்..
                           
- ஹரிதாஸ் (வைர ஹரன்)


ரோஜாவின் தாகம்

new kadhal soga kavithai

ரோஜாவின் தாகத்தை... செடியின் வேர் அறியும்!
ஏன் காதலின் தாகத்தை எப்போது நீ அறிவாய்?
கண்ணீரால் போக்கிகொள்கிறேன் எனது தாகத்தை!
கொஞ்சமாவது கரைத்துவிடும் எனது சோகத்தை!
          
                                                     - Dinesh kumar AP

உன்னை திரும்ப காண

Anbu kavithaigal in tamil

நீ என்னை பிரிந்து போகும்போதெல்லாம்  

காலத்தையும் நேரத்தையும் ஏமாத்துவதற்காக

ஏன் கடிக்கார முல்லை திரிப்பிவேடுகிறேன்

உன்னை திரும்ப காண அன்பே!...

காதல் கதவுகள்

best love kavithai in tamil

என் தனிமையின் போது...
காதல் கதவுகளை உடைத்து எரியும்...
தாப்பால்கலைப்போன்றது..
உனது காதல்...

                                                                                          - Dinesh kumar AP

புரிந்து கொள்வாய்!

tamil love failure kavithai

நீ எவ்வளவு வலிகள் கொடுத்தாலும்

தாங்கிக்கொண்டு உன் நினைவுகளுடன்

உயிர் வாழ்வேன்!...

நான் படும் வேதனைகள்

உன் இதயத்திற்கு தெரியும்!...

ஒரு நாள் புரிந்து கொள்வாய்

உன்னால் சித்ரவதை செய்யப்பட்ட

உயிர் நான் என்பதை!...

உன்னை பிரிந்து இருக்கும்

யுகங்கள் நான் வேண்டி நிற்கவில்லை

இருந்தும் விலகி நிற்கிறேன்

உன் விருப்பம் அதுவென்பதால்!...

நன்றி - கல்பனா ரமேஷ்

ஏனோ...?

kavithai for love

அவன் இருக்கும்
திரும்பும் இவள் ...
ஏனோ ..?
தன்பார்வை வீச மட்டும்
(சூரியன் - சூரியகாந்தி பூ )

உனது நினைவுகள்

kavithai for lover

நீ என்னை விட்டு தூரம் சென்றாலும்..

ஏன் பக்கம் நின்று கொண்டு...

என்னை கொள்ளுகின்றன...

உன்னை அடிக்கடி பார்க்க சொல்லி          

                                                                           - Dinesh kumar AP

கனவு வீடுகள்

Hard work poems in tamil

சொந்த வீடு எனக்கு ஆறு மாதம் மட்டும் தான்
இப்படிக்கு கட்டிட தொழிலாளி!
                                                               
                                                                                            - Dinesh kumar AP

காதல் நதிகள்

நதிகளுக்கு வழி விடலாம்!
தடைகள் இல்லாத
நமது அழகான காதல்
                                                                               - Dinesh kumar AP

காமம் இல்லை காதல்!

Short love poems for wife

உன்மீதான காதலை

காமத்தினால் வந்த காதல்!

என்று நினைத்து விடாதே!

என் அன்னை என்று -நான்

அழைத்திருக்க மாட்டேன் அன்பே!

- தினேஷ் குமார் எ பி

காதல் பூக்களாக!

soga kavithai images

இவள் கூந்தல் பின்னல் பார்த்து தான்!
நான் அவள் பின்னால் சென்றேன்...
தலையில் சூடும் பூவாக - ஒரு
நாள் வாழ்ந்தால் போதுமென நினைத்து!
மலரை வைத்தேன் எனது காதலை...
மாலையில் வாடியது பூ - மட்டுமல்ல
நானும் தான்...

எனது தன்னம்பிக்கை!

thannambikkai kavithai in tamil

எத்தனை தடவை
என்மேல் கற்களை விசினாலும்...
நான் விழ்வது போல விழ்ந்து...
மறு நொடியே எழுந்து விடுகிறேன்...
மேகத்துக்குள் ஒளிந்துருக்கும் கடல் நீரைப்போல....
எனது தன்னம்பிக்கை...

தனித்து நிற்கும் காதல்!

beautiful tamil kavithai images

சின்னங்கள் இன்றி
காதல் வண்ணங்களில்
தனித்து நிற்கிறேன் - தேர்தலில்...
வெற்றி பெற்ற பிறகும் 
அரைக்கம்பத்தில் பறக்கின்றது 
எனது காதல் கொடி..

சேர்த்து வைப்போம் பிரிவை!

Piruvu tamil kavithai

நமக்குள் பிரிவு ஏற்படுகிற...
ஒவ்வொரு தருனமும் தயக்கங்கள் தயங்குகின்றன
நம்மை தள்ளி வைக்க
மீண்டும் சேர்த்து வைக்க முயற்சிக்கிறேன்
ஒரு நிமிடம் பிரிவையாது!

A P Dinesh Kumar

தமிழ் கவிதை

how to write tamil lyrics

அவள் எனது கவிதைக்காக காத்துருந்தால் அன்று
இன்றைக்கு படிக்க நேரம் இல்லையாம் இன்று
நான் வெளிட்டது - எனது
கவிதை மட்டும் அல்ல எனது வேதனையும் தான்
இனி ஒருபோதும் விரல் படாது எனது பேனாவில்
கவிதை எழுத விடைதருகிறேன் எனது கவிதைக்கு
வீண் முயற்சி வேண்டாம் எனது தமிழுக்கு
விட்டு விடு விலகிக்கொள்கிறேன்...

A P Dinesh Kumar

பெண்கள் தின கவிதை

woman's day kavithaigal

பெண்ணை வெறுக்கவும், மறக்கவும்

நினைத்தது என்றால் ஆண்களுக்கு

இதயம் கூட பெரிய பாரம் தான்

இந்த உலகில்!

- தினேஷ் குமார் எ பி

காதல் சுவாசம்

cute love tamil kavithai images

இம்மொழிக்கு மட்டும் மொழிபெயர்ப்பு வேண்டாம்!
இவ்வுலகில் "காதல்"!

இடம் விற்பனைக்கு அல்ல

Kavithai poetry websites

நானும் நலமாக இருக்கிறேன்!
என் மனமும் நலமாக இருக்கிறது
என் இதயத்தில் நீ இருக்கும் வரை...
என் கண்களில் பலபேருக்கு
இடம் உண்டு ஆனால்!
என் இதயத்தில் ஒதிக்கித்தர உன்னை தவிர
வேறு யாருக்கும் இடம் இல்லை...

நன்றி - Ajai sunilkar

இதயத்தின் ஓசை காதல்

kadhal kavithai tamil movie

இரவின் ஒளியில் நினைவுகள் சுமந்த இதயத்தின் ஓசை
விடியும் முன்னே சூரியன் வந்து கலைத்து விடுமா!
என் கனவின் உயிரை அதோ சூரியன் வரும் முன் உன் நினைவுகளால் நீயே என்னை கொன்று விட்டாய் உயிர் காதலியே!

A P Dinesh Kumar

பார்க்க நினைப்பது கண்கள்

tamil kavithai image for love

இமைக்கின்ற கண்கள் பார்ப்பது

பலரை என்றாலும்

பார்க்க நினைப்பது

உன்னை மட்டும்தான்...

துடிக்கிற இதயம்

எனக்குள் இருந்தாலும்

அது உனக்காக மட்டும்தான்

காதலர் தினம்

new tamil kavithai image

எத்தனை ஆண்டு காதலர் தினம்
கடந்து போனாலும்...நம் காதல்
பரிமாற்றம் செய்த - அந்த நாட்கள் தான்
நம் இருவருக்கும் காதலர் தினம்!

A P Dinesh Kumar

எனது கவிதைக்கு பரிசு

love guru photos

என்னோட கவிதை டாப் 20 காதல் கவிதையாக ரேடியோ சிட்டி 91.1 பண்பலையில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதை நான் மிக மகிழ்ச்சியுடன் தெருவிக்கிறேன்.நன்றி!

கவிதை தலைப்பு : குடைபிடித்து செல்லாதே!

எனது - உயிர் பிரிந்து
சென்ற பிறகும்...
காற்றாக கலந்து
மேகத்தில் உறைந்து
கண்ணீர் என்னும் பெயரில்
மழையாக விழுவேன்!
உனது
இதயத்தில் இடம் பிடிக்க
குடைபிடித்து செல்லாதே!

கவிதை தலைப்பு : காதல் நெறிசல்!

உன்னுடன் சாலையை
கடக்கும் போது...
என்னை மறந்தேன்! அன்று !
உன் விரல் படும் நேரமல்லாம்...
இப்படி பட்ட விபத்துகள்!
எப்போது நடக்கும் என
இதயத்தில்! ஒரு நெறிசல்
இப்போதெல்லாம்
பச்சை விளக்கு விழுந்த பின்பும்
கால்களில் பயணம் தடை பெறுகின்றன!
நீ இல்லாத இந்த சாலையில்!...

கவிதை தலைப்பு : காதல் காயங்கள்!

உன்னை காயப்படுத்துவது
என் கண்ணிருக்கு
கூட விருப்பம் இல்லையாம்.
அதனால் - என்னவோ
உன்னை பாத்ததும்
ஒளிந்து கொள்கின்றன.
கண்ணீர் சில காயங்கள்...

காதலர் தினம் கவிதை - வண்ணமே!

love poems in tamil images kavithai
உன் உடலின் வண்ணத்தை
எத்தனை பூவிடம் பரிதாய் அன்பே!
உன் சிறகில் ஆடும்
நடனத்தை எந்த மயிலிடம் கற்று
கொண்டாய் அழகே!

காதலர் தினம் கவிதைகள் - காதல் சுவை

valentine day tamil kavithai

இத்தனை சுவையான பழங்களை!
நான் சுவைத்தது இல்லை - அன்பே!
இப்போது சுவைக்கிறேன்!
உன் கன்னத்தின் தோலுறித்து!

காதலர் தினம் கவிதை - கூந்தல் வாசம்!

tamil kadhal kavithaigal photos

காதலா - உன் கைகளில்
இத்தனை வசமா ? எப்படி வந்தது ?
கொஞ்சம் முகர்ந்து தான் பாரே!
பூக்களை மட்டும்! கூந்தலை அல்ல!

காதல் கண்ணாமுச்சி

tamil romantic poems Potos

என்னவள்! பொட்டு வைத்த கன்னியவள்!
கண்களில் மாட்டித்தவிக்கும் காளை நான்!
என் நெஞ்சம் தவித்து,
மஞ்சத்தில் தழைத்ததோ என் காதல்?
கண்ணை கட்டி கொள்ளாமல் 
கண்ணாமுச்சி ஆடுகின்றன
இவளது காதல்!

காதல் பயணங்களில் முத்தம்

tamil kavithai kiss love poems

தூரப்படுகின்றன - இதயத்தின்
நெருக்கத்தை அதிகரிக்க!
இணையாத தண்டவாளம்
இனைகின்றன இரு - விழி
காதல் பயணங்களில்!...
பயணத்தின் போது
விபத்துகள் ஏற்படுகின்றன
விழிகள் மூடி முத்தம் இடுகையில்!

நீ எனக்கு வேண்டும்

Images for tamil sad kavithai

நாம் என்ன? தவறு செய்தோம்!
என்று தெரியவில்லை? தண்டனை - மட்டும்
பெறுகிறோம் பேசாமலே - எத்தனை
துன்பங்கள் வந்தாலும்...
பிரிய மாட்டேன் - நீ
எனக்கு வேண்டும் {ட} - என்று
சொல்லும் போதும் கலங்குகின்றன
கண்கள் மட்டும்.