விழிகளின் அழைப்பிதழ்

Tamil Love Kavithai

விழிகளின் அழைப்பிதழ் அது காதலின் கடிதம்,

கடிதம் படிக்கும் முன்  என் விழிகள் மட்டும் நீண்ட உறக்கத்தில் அதிகாலை  விடிந்த பின்னும் !

கரு மேகம் கருக்கவில்லை, புயல் காற்று வீச வில்லை, 

மழைச்சாரல் தூவவில்லை, கண்ணீர் மட்டும் வருகின்றதடி உன்னை  காணாத நாட்களில் மட்டும்!

தண்ணீரின் விதைகள் மழைச்சாரல்களாக

கரைக்கடந்து ஓடுதடி காதல் வெறும் ''கண்ணீரில்'' 

சில்லென்ற காற்று விசும்போதொல்லாம் உனது விழிகள் அழைத்த தடி

என்னை காதலி என்று!

இனி காலம் முடிந்தாலும் கடைசி வரை கூட இருப்பேன் என்று  கடைக்கண் சொன்னது காளையரிடம் ! காதல்...


கடற்கரை காதல்

Tamil Love Kavithaigal

கடற்கரை தாகம் காதலர்களின்  வருகை...
கடற்கரை ஓரம் கண்டடுக்கப்பட்ட முத்து  காதல்!
கவிழ்ந்த படகில்  நீண்ட பயணம் காதலர்கள்  மட்டும்!...
பயணம் முடிந்த  பின் முத்த பரிசு இருவருக்கு  மட்டும்!....

உனது விழிகள்....

Pirivu Kavithai

நிழல் படாத நிலவுடைய உன் கண்களை
இமைத்திரையில் மூடிக்கொள் ! அன்பே!
வெயில் படாத என் இதயத்தில்,
வெப்பக் காற்று வீசியது,விடை பெற சொல்லி!
விருப்பம் இல்லாமல் சொன்னது...உனது விழிகள்....

திருந்திய வேடன்


உலகம் என்னும் காட்டுக்குள் மிருகங்கள் வேடம் இடுகின்றன...

மனிதர்களாக !

                                                                                                     -திருந்திய வேடன்...

காதல் கைதி !

Love Kavithaigal In Tamil

பிரிவு  என்னும் நாட்களை

தூக்கிலிடும் வரை !

உண்மையாக காதலிப்பவர்கள்

அனைவரும் குற்றவாளிகள் தான் !

                                                                                                                            இப்படிக்கு

                                                                                                                            காதல் கைதி !

தோல்வி மழை துளி போன்றது

Thanampikkai-kavithaigal-tamil

மண்ணில் விழுந்த சில மழை
 துளிகள் மறைந்து விடுகின்றன!
ஆனால் அதற்கு தெரிவதில்லை
நாம் விழவில்லை,
பல உயிர்களை நம்மால் 
விதைக்க படுகின்றன என்று!

A P Dinesh Kumar