மழை ஜன்னல்


jannal kavithaigal

ஜன்னல்கள்
உடைத்து
மழை வந்து
எழுப்பிய பிறகும்!..
என்னை தேகட்டாமல்
தூங்கவைக்கின்றது
இந்த தென்றல் காற்று!🌨🌩
🌨

அந்தரங்க காதல்

kavithai secret

கவிதைக்கும்,
கவிஞனுக்கும்,
உள்ள தொடர்பு
அந்தரங்க காதலைப்
போன்றது...


- கவிஞர். தினேஷ் குமார் ஆ. பா

காதல் கவிதை!

Sweet kadhal kavithai

புத்தகம் கையிலே!
புரலுகிறது...
கவிதை!
உன்னை நினைத்து...

- தினேஷ் குமார் ஆ .பா

கொலைமுயற்சி!

eye kavithaigal

தற்கொலைக்கு
தூண்டுகிறது!
தினந்தினம் 
உன்னுடைய...
புருவவாள்!

- தினேஷ் குமார் எ பி

அலைப்பார்வை

kangal kavithai images

மணலை
இழுத்து செல்லும்!
அலை போலவே!
என் மனதை
இழுத்து செல்கிறாய்!
உன்னுடைய
ஒவ்வொரு
பார்வையிலும்!

- தினேஷ் குமார் எ பி

 

காதல் பரிந்துரை

kadhalar kavithaigal 2018

நீ என்னை...
நினைக்கும் நிமிடங்களில்...
உன்னை தொடாமலே...
உன் மனம் நுழைகிறேன்...
இதயத்தின் பரிந்துரையால்...

- தினேஷ் குமார் எ பி

காதல் நிபந்தனைகள்!

mutham kavithai

காப்புரிமை முத்தங்களுக்கு - மட்டுமே!
உனது இதழ்களுக்கு அல்ல...

- தினேஷ் குமார் எ பி

இதழ் பதிப்பகம்

kavithaigal about Kiss

எனது கற்பனைகளில் வெளிவரும்...
அனைத்தும் கவிதையும்,
உன் இதழ்களிலே பதிகின்றன!..

- தினேஷ் குமார் எ பி

 

கானல் நீர்

kaanal neer kavithaigal

உன் கரம்
பிடித்த பிறகு...
உன் கண்ணில்...
கானல் நீராய்...
கான ஆசை!
என் இமை {உயிர்}
உதிரும் வரை...

- தினேஷ் குமார் எ பி

காதல் செய்தி!

tamil love feeling kavithai images

உன் நினைவு
மின்னல்கள் !
எனது இதயத்தை...
தாக்கியதால்!
இரவு முழுவதும்...
கனமழை !

கண்களில்...

 

- தினேஷ் குமார் எ பி

சந்தோஷம் இலவசம்!


எனக்குள் உள்ள சந்தோஷத்தை!
இரவலாகக்கூட  தந்துவிடுகிறேன் - ஆனால்!
விலைக்கும் கிடைக்காது!
எனது துக்கங்கள்!...

- தினேஷ் குமார் எ பி

காதலியின் பிரிவு

love kavithai for girl friend

நீ தழுவிக்கிடந்த போது

பூரித்திருந்த என்மேனி,

இப்பொழுது மெலிந்து

காணப்படுகிறது.

காதலின் பிரிவை

அறிவிப்பதற்காக போலும்!

காதலியின் வருத்தம்!

tamil sad kavithaigal images

நீ தீண்டாத என் கைகள் !
இப்பொழுது வளையல்களும்,
கழலும்படி மெலிந்தன !
காதலியின் வருத்தம் !!!

- தினேஷ் குமார் எ பி

கண் மயக்கம்!

மாம்பழ மேனியில் !
 மாதுளம் கண்டேன் !
மாதவன் பருகிட !
மங்கையவள் கண் சொருகிட !!!

- தினேஷ் குமார் எ பி

இதழில் ஈரம்!

நீ பேசிய போது எச்சில் பட்டது
என் கன்னத்தில் !
ஏங்கியது உதடு !
அடடா படவில்லையே...
என் இதழில் ! என்று

- தினேஷ் குமார் எ பி

 

மிட்டாய்

sweet love kavithai Tamil

உனது இதழ் பட்டு
இனிப்புச்சுவை
குறைந்தது
இனிப்பு மிட்டாயில் !!!

- தினேஷ் குமார் எ பி

காதல் பரிணாமவளர்ச்சி

love kavithai a small tamil kavithai
நீ தான்
வேண்டுமென என் மனம்
சொல்லும்போது
என் காதல்  
முழு பரிணாமவளர்ச்சி
அடைந்தது
இன்று...

- தினேஷ் குமார் எ பி

எனது காதலே

love failure tamil images

எத்தனை வெற்றி பெற்ற பிறகும்
உன்னிடம் தோற்றேன் என்பதே,
எனது பெரிய கவலையாகி போகின்றது
ஒவ்வொரு நாளும். ! எனது காதலே !

- தினேஷ் குமார் எ பி

பயணம் வேண்டாம்

rose flower kavithai

பூக்கள் தாவி மரணத்தை தழுவுகிறது
நடை பயணம் வேண்டாமே - பூங்காவில்

- தினேஷ் குமார் எ பி

காதலியை கண்டதும்


உன்னை கண்டதும்
சூரியன் மறைந்து
சுடும் நிலவு தோன்றுதடி !
உன் பால் முகம் கண்டு
பௌர்ணமி மீளுதடி !

- கவிஞர். தினேஷ் குமார் ஆ. பா